PUBLISHED ON : ஜூலை 24, 2022

அ நிறம் | அளவு
கர்நாடக மாநிலத்திலுள்ள புராதன நகரம், ஹம்பி. இங்கு, விஜயநகர சாம்ராஜ்யம் ஆட்சி செய்தபோது, கோவில்களாலும், கம்பீரமான மண்டபங்களாலும் மெருகூட்டப்பட்டது. ஹம்பிக்கு அருகே, ராமாயணம் நிகழ்ந்த இடங்கள் பல உள்ளன. இவை அனைத்தையும் நடந்து சென்று பார்ப்பது மிக கடினம்.
ஹம்பியை சுற்றிப் பார்க்க வசதியாக, கர்நாடக சுற்றுலா துறை, சைக்கிள்களை வாடகைக்கு விட்டுள்ளது. இதனால், தனியாக வருவோர் மற்றும் இளைஞர்கள் வாடகை சைக்கிளை எடுத்து, எளிதில் சுற்றி பார்த்து செல்கின்றனர்.
இதேபோல், தமிழகத்தில் மகாபலிபுரம் உட்பட பல சுற்றுலா இடங்களை எளிதாக சுற்றிப் பார்க்க, சைக்கிள்களை வாடகைக்கு தந்து, தமிழக சுற்றுலாத் துறை வருமானம் ஈட்டலாமே!
— ஜோல்னாபையன்
