PUBLISHED ON : அக் 09, 2016

அ நிறம் | அளவு
படத்தில் உள்ளவர்கள், சைக்கிளில் சர்க்கஸ் வித்தை காட்டுகின்றனர் என்று நினைக்க வேண்டாம். புத்தி கெட்ட மனிதர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த தான், இந்த சைக்கிள் சவாரி! ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள், உலகிலேயே நம் நாட்டின் அசாம் மாநிலத்தில் மட்டும் தான் இருக்கின்றன. இதை, வேட்டையாடி கொன்று விடுகின்றனர். கடந்த, 15 ஆண்டுகளில், 200 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. இதை எதிர்த்து, இயற்கை ஆர்வலர் பசந்த் தாஸ் என்பவர், குழந்தைகளை உட்கார வைத்து, சைக்கிள் சவாரி செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
— ஜோல்னாபையன்
