PUBLISHED ON : செப் 19, 2021

அ நிறம் | அளவு
மியான்மர் நாட்டில், மின்குனி என்ற கிராமத்தில், மிகப்பெரிய புத்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரம்மாண்டமான மணி ஒன்று இருக்கிறது. இதை காண பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
கடந்த, 1810ல் நிறுவப்பட்ட இந்த ராட்சத மணியின் எடை, 1 லட்சம் கிலோ. கடந்த, 1840ல் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தால் இந்த மணி சேதமடைந்து, இன்று, காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கிறது.
ஜோல்னாபையன்
