PUBLISHED ON : ஜூன் 29, 2014

அ நிறம் | அளவு
திருமணத்திற்கு பத்திரிகை வைக்க வருபவர்கள், முதல் காரியமாக பத்திரிகையை கொடுத்துவிட்டு, அப்புறமாக நண்பரிடம் நல விசாரணைகளைத் துவங்கலாம். திருமணத்திற்கு என்னை அழைக்க வந்த உறவினர், உற்சாகமாகப் பேச ஆரம்பித்து, பழைய விஷயங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, காபி, டிபன் சாப்பிட்டு, திருமணப் பத்திரிகையை தராமலே சென்று விட்டார். தாம்பரம் சென்ற பின் ஞாபகம் வந்து, 'சாரிடா இன்விடேஷன் கொடுக்க மறந்தே போச்சு. மறுபடி நாளைக்கு வர்றேன்...' என்றார். 'தாராளமாக வா, ஆனால், அழைப்பிதழை கூரியர் மூலம் இன்னைக்கே அனுப்பிரு...' என்றேன்.
— பாக்கியம் ராமசாமி.
