PUBLISHED ON : ஜூலை 06, 2014

அ நிறம் | அளவு
காசிக்கு சென்று திரும்பும் உறவினர்கள், வழக்கமாக காசி செம்பு (புனித கங்கை நீர் அடைத்தது) கொண்டு வந்து, பிரசாதமாக எல்லா வீடுகளுக்கும் தருவது வழக்கம். என் தாத்தா காலமானபோது, பேச முடியாத நிலையில், காசி செம்பிலுள்ள கங்கை நீர் ஞாபகத்திற்கு வந்து,'க...க... க...' என்றாராம். தாத்தா காபி பிரியர் என்பதால், காபி தான் கேட்கிறார் என்று, அவர் வாயில் காபியை ஊற்றி விட்டனர். இன்றைக்கும் எங்கள் வீட்டில் அது ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது. தாத்தா கடைசியாகக் கேட்டது, 'கங்கா தீர்த்தம்' என்கிறது ஒரு கட்சி; காபி என்று மற்றொரு கட்சி. இறக்கிறவர்கள் தங்கள் கடைசி ஆசையை எழுதிக் காட்டி விடுவது நல்லது; எழுத முடிந்தால்.
— பாக்கியம் ராமசாமி.
