PUBLISHED ON : செப் 14, 2014

அ நிறம் | அளவு
'கம்ப்யூட்டரிலிருந்து, அவனைப் பிய்த்து எடுப்பது கடினம்' என்பது சரியா?
'அவனிடமிருந்து, கம்ப்யூட்டரைப் பிய்த்து எடுப்பது கடினம்' என்பது சரியா?
'மேனகாவை, விசுவாமித்திரரிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியா?
'விசுவாமித்திரரை, மேனகாவிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம்' என்பது சரியா?
எது ஒன்று, முதலிலிருந்து இருந்து வருகிறதோ, அதனிடமிருந்து மற்றது பிரிகிறது. அந்த வீட்டில், அவன்தான் முதல்; கம்ப்யூட்டர், அவனுக்குப் பின்தான் வந்தது. ஆகவே, அவனிடமிருந்து கம்ப்யூட்டரைப் பிய்த்து எடுப்பது கஷ்டம் என்பது தான் சரி. அதுபோல, விசுவாமித்திரரை, மேனகாவிடமிருந்து பிரிப்பது மகா கஷ்டம் என்பதுதான் சரி.
— பாக்கியம் ராமசாமி.
