PUBLISHED ON : செப் 14, 2014

கேரளாவில் உள்ள தலசேரி என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் தான், இந்தியா முழுவதும் உள்ள சர்க்கஸ் கம்பெனிகளில் வித்தை காட்டி வருகின்றனர். 1932ல், தலசேரியில், 'வெஸ்டன் சர்க்கஸ்' என்ற சிறிய சர்க்கஸ் நடைபெற்றது. அப்போது, ஒன்பது வயது சிறுவன் ஒருவன் கட்டணம் செலுத்தாமல், திருட்டுத்தனமாக கூடாரத்துக்குள் புகுந்து, சர்க்கஸை கண்டு ரசித்தான். இதை கவனித்த காவலாளிகள், சிறுவனை பிடித்து வெளியே தள்ளிய போது, கண் கலங்கி நின்றான். இந்த சிறுவன் தான் பிற்காலத்தில், ஜெமினி சர்க்கஸ் என்ற சர்க்கஸ் கம்பெனியை உருவாக்கிய சங்கரன்.
சிறு வயதிலிருந்தே சர்க்கஸ் கலையை நேசித்த சங்கரன், பல சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றினார். 1951ல் விஜயா சர்க்கஸ் என்ற சிறிய கம்பெனியை, ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, அதற்கு, ஜெமினி சர்க்கஸ் என்று பெயர் சூட்டி, முதல் ஆட்டத்தை குஜராத் பில்லிமோறா என்ற இடத்தில் அரங்கேற்றினார். பிற்காலத்தில் அது, பெரிய நிறுவனமாக வளர்ந்து, உலகில் பல இடங்களுக்கு சென்று வித்தை காட்டியது.
நேரு, இந்திரா, ஜோதிபாசு மற்றும் கம்யூ., தலைவர்கள் பலருடன் நெருங்கி பழகினார். ஒருமுறை, பீகாரில் சர்க்கசுக்கு அனுமதி கிடைக்கவில்லை. உடனே, இந்திரா தலையிட்டு, அனுமதி கிடைக்கச் செய்தார். ஜெமினி சர்க்கசுக்கு தற்போது, 91 வயது.
— ஜோல்னாபையன்.
