
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமும் எழுந்தவுடன் பல் தேய்க்கும் பழக்கத்தை, குழந்தைகளுக்கு, 'இ தேயி' என்று கற்றுத் தந்த மாதிரி, 'கா தேயி, மூ தேயி' என்று காது, மூக்கை சுத்தப்படுத்திக்கொள்ளும் பழக்கத்தை ஏன் அமல்படுத்தவில்லை?
'பற்பசை வியாபாரிகள் மட்டும் பிழைத்தால் போதுமா? சொல்லப் போனால், காதும், மூக்கும் தான் 24 மணி நேரமும் திறந்து கிடக்கிறது. ஐம்புலன்களுக்குள் பாரபட்சம் காட்ட வேண்டுமா...' என்கிறான் நண்பன் நாராயணன்.
— பாக்கியம் ராமசாமி.

