PUBLISHED ON : டிச 10, 2017

அ நிறம் | அளவு
நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கு மற்றும் ரத்தம் எடுப்பதற்கு, ரத்தக் குழாய் எங்கிருக்கிறது என்று தேடுவர், நர்சுகள். இவர்களின் குழப்பத்தை தவிர்க்க, புது கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர், திருவனந்தபுரம், ஸ்ரீசித்ரா மருத்துவமனை டாக்டர்கள்.
'சித்ரா சிராதர்சினி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கருவியை, உடலில் வைத்து பார்த்தால், ரத்தக் குழாய்கள் எங்கிருக்கிறது என்பதை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து விடலாம்.
பேட்டரியில்இயங்கக் கூடியஇக்கருவியை, வியாபார ரீதியாக தயாரிக்கும் பொறுப்பு, 'அகாபயோடக்னோஸ்டிக்' என்ற நிறு வனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனிமேல், நர்சுகள் நோயாளிகளின் ரத்தக் குழாயை தேடி, அவதிப்பட வேண்டாம்!
— ஜோல்னா பையன்
