PUBLISHED ON : டிச 10, 2017

அ நிறம் | அளவு
இத்தாலியைச் சேர்ந்த, லியானார்டோ டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம், உலகப் புகழ் பெற்றது என்பது, நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த ஓவியத்தை,'காப்பி' அடித்து, பலரும் பல ஓவியங்களை வரைந்தாலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மார்ஷல் டுச்சப் என்பவர், சமீபத்தில் வரைந்த ஓவியம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
இந்த ஓவியத்தில், அப்படி என்ன அதிசயம் என்று தானே கேட்கிறீர்கள்... ஒரிஜினல் மோனாலிசா ஓவியத்துக்கு, லேசாக, தாடி, மீசை வரைந்து, மோனாலிசாவை, 'மேன்லிசா'வாக மாற்றி விட்டார், மார்ஷல். பார்ப்பதற்கு, வித்தியாசமாக தெரிந்ததால், இந்த ஓவியத்துக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.
