
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவின் சுலேவெசி மாகாணத்தில், படன் என்ற சின்னஞ்சிறிய தீவு உள்ளது. இங்கு, பழங்குடியினத்தவர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு, நீல நிறத்தில் கண்கள் உள்ளன.
நிறைய பேர்களுக்கு, இரண்டு கண்களும், சிலருக்கு, ஒரு கண் மட்டும் நீல நிறத்தில் உள்ளது. நீல நிறக் கண்கள் உடையவர்களில் பெரும்பாலானோருக்கு, கண் பார்வையிலும் குறைபாடு உள்ளதாம்.
இது குறித்த ஆய்வு நடத்த, சில ஆராய்ச்சியாளர்களை நியமித்தது, இந்தோனேஷிய அரசு. அவர்கள் அளித்த அறிக்கையில், 'மரபணு சார்ந்த குறைபாடு காரணமாக, இவர்களது கண்கள், நீல நிறத்தில் உள்ளன. இதை, 'வார்டென்பர்க் சின்ரோம்' என, அழைப்பர். இதை, நிரந்தரமாக குணப்படுத்துவது. கடினம்..' என, தெரிவித்துள்ளனர்.
— ஜோல்னாபையன்