/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கொதிக்கும் ஆறு; மடியும் விலங்குகள்!
/
கொதிக்கும் ஆறு; மடியும் விலங்குகள்!
PUBLISHED ON : ஏப் 24, 2016

தென் அமெரிக்காவில் உள்ள நாடு பெரு; இங்கு தான், உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான, அமேசான் ஆறு பாய்கிறது.
இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில், மயாண்டுகாவு என்ற இடத்தில், 6.4 கி.மீ., நீளம் உள்ள ஒரு சிற்றாறு பாய்கிறது. இதை, 'கொதிக்கும் நதி' என, அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த ஆற்றின் நீர், 50 - 90 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், சில இடங்களில், 100 டிகிரி செல்சியசை தாண்டி, கொதிக்கிறது.
வெளி உலகத்துக்கு தெரியாமல் மிக மர்மமாக இருந்த இந்த ஆற்றை பற்றிய செய்தி, கடந்த சில ஆண்டுகளாகத் தான், வெளியில் கசிந்துள்ளது. 'இந்த ஆற்றின் தண்ணீர், ஏன் கொதிக்கிறது...' என்பதற்கு, அறிவியல் ரீதியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் முயல், கரடி போன்ற மிருகங்கள், இந்த ஆற்று நீரில் செத்து மடிவது, பரிதாபம்!
— ஜோல்னாபையன்.

