PUBLISHED ON : ஏப் 24, 2016

மலையாள நடிகரும், கம்யூ., எம்.பி.,யுமான இன்னசென்ட், பார்லிமென்டில் பேசும் போது, தான் ஒரு புற்று நோயாளி என்றும், நோயுடன் போராடி வெற்றி பெறுவேன் என்றும் கூறி, 'எம்.பி.,களின் வருகை பதிவேட்டில், சோனியா பெயருக்கு அடுத்து, என் பெயர் இருக்கிறது. கையெழுத்து போடும் போது, பக்கத்தில் நான் இருந்தாலும், அவர், என்னை கண்டுகொள்வதில்லை. யாரையும் கவனிக்காமல், வேகமாக நடந்து செல்வார்.
'ஒருநாள், அவர் யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தார். அப்போது, நான் அவரை கடந்த போது, என்னை அழைத்து, 'இன்னசென்ட்... உங்களுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்து, வேதனைப்பட்டேன்; எந்த இடம் பாதிக்கப்பட்டுள்ளது...' என்று கேட்டார். 'தொண்டையில்...' என்றவுடன், 'நான் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்...' என்று கூறி, வேகமாக நடந்து சென்றார்...' என்றவர், 'ஏழைகளுக்கு இலவச புற்றுநோய் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும்...' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
அவர் மலையாளத்தில் பேசியதை கேட்டு, எம்.பி.,கள் கண் கலங்கினர்.
— ஜோல்னாபையன்.

