PUBLISHED ON : ஏப் 24, 2016

'செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா...' என, ஆய்வு செய்து வருகிறது, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா. இன்னும் சில ஆண்டுகளில், அங்கு, மனிதர்களை குடியமர்த்துவதற்கான வேலையும் வேகமாக நடக்கிறது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில், உருளைக் கிழங்கு விவசாயம் செய்வதற்கான ஆராய்ச்சியை தீவிரப் படுத்தியுள்ளது நாசா. இதற்காக, பெரு நாட்டின் லிமா நகரில், இடம் தேர்வு செய்யப்பட்டு, செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலைக்கேற்ப, மிகப் பிரமாண்டமான கூண்டுகள் அமைக்கப்பட்டு, அதற்குள், உருளைக் கிழங்கு பயிரிட்டு, ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வெற்றிகரமாக நடந்தால், செவ்வாய் கிரகத்திலும், உருளைக் கிழங்கு விவசாயம் செய்யலாம்.
எப்படியோ, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறினால், அவர்களுக்கு அங்கேயே பயிரிடப்படும் உருளைக் கிழங்கு சிப்சை சுவைக்கும் அனுபவம் கிடைக்கும்.
— ஜோல்னாபையன்.

