PUBLISHED ON : மார் 11, 2018

அ நிறம் | அளவு
டில்லியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில், ஒரு கார் கழுவ, 160 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், நிசான் கார் நிறுவனம், தண்ணீரை குறைவாக பயன்படுத்தி, நுரையால், காரை சுத்தப்படுத்தி, 61 லட்சம் லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் ஏற்படுத்திய, 'போம் வாஷ்' மூலம், ஒரு காரை சுத்தப்படுத்த, 90 லிட்டர் தண்ணீர் தான் தேவை. இதனால், தண்ணீர் பயன்பாடு, 45 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு, 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்படுத்தும் தண்ணீரை தான், நிசான் நிறுவனம், மூன்று ஆண்டுகளில் மிச்சப்படுத்தி உள்ளது.
— ஜோல்னா பையன்.
