PUBLISHED ON : மார் 11, 2018

அ நிறம் | அளவு
கேரள மாநிலம், பாலக்காடு அருகில் உள்ள பெருமாட்டி என்ற ஊரின் பஞ்சாயத்து தலைவர், மாரிமுத்து. இவர், பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும், தன் பழைய தொழிலான, தென்னை மரம் ஏறி, கள் எடுக்கும் தொழிலை கை விடவில்லை. 'பஞ்சாயத்திலிருந்து கிடைக்கும், 13 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து, குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது; வீட்டுக் கடனையும் கட்டியாக வேண்டும். எனவே தான், கள் இறக்கும் தொழில் செய்து வருகிறேன்...' என்கிறார். நம்மூர் வார்டு கவுன்சிலரை கூட இப்படி நினைத்து பார்க்க முடியுமா!
— ஜோல்னாபையன்.
