PUBLISHED ON : மார் 11, 2018

அ நிறம் | அளவு
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், கொய்ரோட்டா என்ற இடத்தில், காட்டை ஒட்டி, மசாய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, காட்டு விலங்குகள் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதை காணலாம். நாகரிக வாழ்க்கையை விரும்பாமல், இன்றும் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர், இங்கு வசிக்கும் மாரா என்ற காட்டுவாசிகள்.
கறுப்பாக இருக்கும் இவர்கள், சிகப்பு நிற ஆடைகளை விரும்பி அணிகின்றனர். இந்த இன ஆண்கள், எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். ஒரு பெண்ணை மணக்கும்போது, அவள் வீட்டுக்கு, 10 மாடுகளை வழங்க வேண்டும். விசேஷ நாட்களின்போது, மாட்டின் கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி, ரத்தத்தை உறிஞ்சி குடிப்பது, இவர்களது வழக்கம்.
— ஜோல்னாபையன்
