PUBLISHED ON : அக் 24, 2010

அ நிறம் | அளவு
ஐதராபாத் ஹலீமுக்கு காப்புரிமை!
நினைத்தாலே சுவைக்க தூண்டும், நாவில் எச்சில் ஊற வைக்கும் ஐதராபாத் புகழ், 'ஹலீம்' உணவு வகைக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. ஐதாராபாத் பிரியாணி போன்று மட்டனில் தயாராகும் இந்த உணவு வகை, ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. மட்டன், கோதுமை, பருப்பு, மசாலா பொருட்கள், நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஹலீம், இப்போது சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. நெல்லை அல்வா, பனாரஸ் பட்டு, டார்ஜிலிங் டீ போன்று இந்த உணவுப் பொருட்களையும் யாரும், எந்த ஊரிலும், 'ஹைதராபாத் ஹலீம்' என தயாரிக்க முடியாது. — ஜோல்னா பையன்.
