தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை

கவிதைச்சோலை

கவிதைச்சோலை


PUBLISHED ON : அக் 24, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* விவசாய நிலத்தை

வீட்டு மனைக்கு வித்தாச்சு...

சொந்தம் சொல்லி

சுடுகாடும் பட்டாவாச்சு!

* அன்றாடம் அரிசி பருப்பு

விலை ஏறிப் போச்சு...

அம்மாவின் தாய்ப் பாலுக்கு

விலை வச்சாச்சு!

* தண்ணீர் தங்கமாச்சு

தவளை நீந்தும் ஏரி மாயமாச்சு...

மழைக்காலம் பொய்த்துப் போனதாலே

மரமெல்லாம் விறகாகிப் போச்சு!

* கள்ளிச் செடியில் ஓணான் விளையாடிய

காலம் மாறிப் போச்சு...

ஈசல் பறக்க இடமில்லாது

இயற்கை அழிஞ்சு போச்சு!

* நெல் வயல் இரையாகி

நெடுஞ்சாலையாச்சு...

தெருக்கூத்து மைதானமும்

ஒரு தெருவாச்சு!

* காராம் பசு மேய

கட்டாந் தரைதானிருக்கு...

காடுமலை அழிஞ்சு

கட்டடமா வளர்ந்துடுச்சு!

* நீரும் நெருப்பும் தனித்தனி

நம்பிய காலம் போச்சு...

பூகம்ப அலை வந்து

பூமி உலுக்கியாச்சு!

* உள்ளங்கையில் உலகமாக

விஞ்ஞானம் வளர்ந்துடுச்சு...

காத்து, ரீனா ரீட்டா சுனாமி

உருவாச்சு!

* கலப்படமற்ற காற்று

விஷமாகிப் போச்சு...

ஓசோன் படலம்

ஓட்டை உண்டாச்சு!

* பன்றி காய்ச்சல்

பாரதமே நடுங்கிடுச்சு...

முக கவசம் போட்டுகிட்டு

மூலையிலே முடங்கிடுச்சு!

* இயற்கையை அழிச்சு

சவக்குழி தேடியாச்சு...

விஞ்ஞானம் விருட்சமாகி

மருந்தே மனிதனை ஆளும் காலமாச்சு!

* விஞ்ஞானத்தை வென்றிட

விளை நிலத்தை அழிச்சாச்சு...

விரும்பியே சவக்குழி

நாமே தோண்டியாச்சு!

* இனியொரு விதி செய்து

இயற்கையைக் காப்போம்...

இயன்றவரை இறைவன் தந்ததை

அழிவிலிருந்து மீட்போம்!

— க.மோகன்,  அறந்தாங்கி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us