தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாக்ஸ் மேட்டர் !

பாக்ஸ் மேட்டர் !

பாக்ஸ் மேட்டர் !


PUBLISHED ON : நவ 07, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

* மியான்மரில் வெள்ளை யானை!

மியான்மர் நாட்டில் (பர்மா) சமீபத்தில் வெள்ளை யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராகைன் மாநிலத்தில் மங்க்டோ என்ற ஊரின் அருகே உள்ள அடர்ந்த காட்டில் சுற்றித்திரிந்த வெள்ளை யானையை, வன அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 18 வயதான அந்த யானை, ஏழு அடி உயரம் கொண்டது. 'வெள்ளை யானை வலிமையின் சின்னம். எந்த நாட்டில் வெள்ளை யானை உள்ளதோ, அந்த நாடு செழிப்பாக இருக்கும்; மக்கள் அமைதியாக வாழ்வர். எந்த அபாயமும் நாட்டிற்கு ஏற்படாது...' என்பது மியான்மர் மக்களின் நம்பிக்கை. மியான்மரில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே காட்டில் கடந்த ஜூன் மாதம் 38 வயதான ஒரு வெள்ளை யானை கண்டுபிடிக்கப்பட்டது. 2001ல் இருந்து மியான்மரில் பிடிக்கப்பட்டுள்ள நான்காவது வெள்ளை யானை இது. — ஜோல்னா பையன்.

* டைட்டானிக் கப்பல்  விபத்தில் சிக்கியது ஏன்?

'மூழ்கவே மூழ்காது' என பிரகடனப்படுத்தப்பட்ட டைட்டானிக் கப்பல், முதல் பயணத்திலேயே பெரும் விபத்தை சந்தித்து, கடலில் மூழ்கியது. பல நூறு பேரை பலிவாங்கிய இந்த கப்பல் குறித்து, நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது புது தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து 1912ல் அமெரிக்கா புறப்பட்ட டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி, உடைந்து, கடலில் மூழ்கியது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்தததாக இதுவரை நம்பப்பட்டு வந்தது. இப்போது, இந்த விபத்து குறித்து லண்டனில் புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. அதில், 'இந்த கப்பல் விபத்தை சந்திக்க காரணம், பனிப்பாறை அல்ல; கப்பலை தவறாக இயக்கியதுதான்...' என கூறப்பட்டுள்ளது. கப்பல் ஊழியர்களின் தவறு அம்பலமானால், கப்பல் நிறுவனமே திவாலாகிவிடும் என்பதால், இந்த உண்மை மறைக்கப்பட்டதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.  — ஜோல்னா பையன்.

* ஏலத்துக்கு வந்த திப்பு சுல்தான்  தங்க கைப்பிடி!

இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கபட்டினத்தில் ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தான். அவனது வீழ்ச்சிக்குப் பின்னர், அவன் அரண்மனையில் இருந்த தங்க சிம்மாசனம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.அந்த சிம்மாசனத்தின் கைப்பிடி,  சிங்கத்தின் தலை போல் காட்சி தரும். அதில், விலை உயர்ந்த பல கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. தங்கத்தால் ஆன அந்த கைப்பிடியில் ஒன்று, சமீபத்தில் லண்டனில் ஏலத்திற்கு வந்தது. இரண்டு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த ஆண்டு இதே போன்ற இன்னொரு கைப்பிடி ஏலம் போனது. அதை பிரபல மதுபான தயாரிப்பாளர் விஜய் மல்லையா இரண்டு கோடியே 92 லட்சத்து  20 ஆயிரம் ரூபாய்க்கு  வாங்கினார். இந்த இரண்டு கைப்பிடிகளையும், 200 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தன் வசம் வைத்திருந்தது. —  ஜோல்னா பையன்.
 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us