தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச் சோலை - உள்ளொன்று வைத்து ...

கவிதைச் சோலை - உள்ளொன்று வைத்து ...

கவிதைச் சோலை - உள்ளொன்று வைத்து ...


PUBLISHED ON : நவ 07, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பிரபஞ்சத்தில்

கருப்புப் பள்ளங்கள்

பல சூரியன்களை

விழுங்கி ஏப்பம் விடுவதை

விஞ்ஞானிகள் காட்டுகின்றனர்!

* மனித உள்ளங்களை தான்

இன்னும்

எட்டிக்கூட பார்க்க முடியவில்லை...

உள்ளே விழுந்த

சித்தர்கள், ஞானிகள்

இன்னும் திரும்பவில்லை!

* உள்ளமும், உதடுகளும்

இணைந்தால்...

உலகம் நம்மை தேடிவருமாம்!

* கைநீட்டி

கடன் கேட்கும் போது

பொய்யான வாய் பேசுகிறது...

கொடுத்ததை

திருப்பிக் கேட்டால்

உள்ளிருக்கும் உள்ளம் பேசுகிறது!

*     சதிகார மனம் சொல்வதை

நீங்கள் சட்டென கேட்பதற்கு

சண்டை வரவேண்டும்...

இல்லையென்றால்

சாவு வரவேண்டும்...

அதனால்தான்

மரண வாக்குமூலம்

மகத்துவமாகிறது!

*     எச்சில் பட்டே

இருப்பதாலோ என்னவோ

வாய்மையை மறப்பதற்காக

சில வாய்கள்

வருந்துவதே இல்லை!

*     அவசரப் படுவதுதான்

மனதுக்கு மரபாக இருக்கிறது...

உதடுகள்

காதலைச் சொல்வதற்குள்

உள்ளம் பாய் விரிக்கிறது!

*     மறைத்து வைத்து, மறைத்து வைத்து

மகுடமா சூடப் போகிறோம்...

அழகாக இருக்கிறீர்கள்...

நன்றாகப் பேசுகிறீர்கள்...

இதைக்கூடச் சொல்லாமல்

என்னச் சாதிக்கப் போகிறோம்!

*     நல்லவேளை...

உண்மை அறியும் சோதனையை

இன்னும் நாம்

காதலர்களுக்கோ

கணவன் - மனைவிக்கோ

கட்டாயமாக்கவில்லை...

அப்படிச் செய்து விடாதீர்கள்...

மனித வாழ்க்கை முடிந்து விடும்!

*     உதடுகளில் மனமிருந்தால்

மழலையில் நான் அழகாயிருந்தேன்!

முகத்தில்

பல முகமூடிகள் விழுந்ததால்

முகவரியைத் தொலைத்து விட்டேன்!

*     உதடுகளுக்கு வேண்டுமானால்

சிகப்புச் சாயங்களைப்

பூசிக் கொள்வோம்...

வார்த்தைகளில் அது

கலந்து விடாமல்

கவனமாக இருப்போம்!

— மு.பாண்டியன்,   நெய்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us