தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

(1).  கரையில் ஒதுங்கிய அபூர்வ பிராணி!

மேற்கு ஆப்ரிக்காவில், கடற்கரையை ஒட்டியுள்ள நாடு கினியா. இந்த நாட்டின் ஒதுக்குப்புறமான கடற்கரை ஓர கிராமம் ஒன்றில், சமீபத்தில் மிகவும் அருவருக்கத்தக்க மிகப்பெரிய பிராணி ஒன்று கரை ஒதுங்கியது.  காலையில் கடற்கரைக்கு வந்த கிராம மக்கள், அதை அதிசயமாக பார்த்தனர். ஓரளவு அழுகிய நிலையில் காணப்பட்ட இந்த மிருகத்திற்கு நான்கு தாடைகள், நீண்ட வால், நீண்ட முடிகள் காணப்பட்டன. அதன் உடல் மிகவும் பெரிதாக காணப்பட்டது. "கடலில் இதுவரை இப்படி ஒரு பிராணியை பார்த்ததே இல்லை...' என, இந்த கிராம மீனவர்கள் கூறினர். இந்த அபூர்வ மிருகத்தை கடல் வாழ் உயிரின நிபுணர்கள், சோதனை செய்தனர். "இதற்கு என்ன பெயர் வைப்பது என்று கூட முடிவு செய்ய முடியவில்லை. வித்தியாசமான இந்த உயிரினம் எப்படி, எங்கு வசிக்கிறது? இங்கே எப்படி வந்தது என்றே தெரியவில்லை...' என, அந்த நிபுணர்கள் கூறினர்.                                          ***



(2) டாய்லெட் பேப்பரான கரன்சி!

ஆப்ரிக்காவில் மிக மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கியிருக்கும் நாடு ஜிம்பாப்வே. இயற்கை வளம் மிகுந்த  இந்த நாட்டில், அரசியல்வாதிகள் சரியல்ல. மோசமான பொருளாதார கொள்கை காரணமாக, நாடு மிகப்பெரும் சீரழிவை சந்தித்துள்ளது. அதற்கு உதாரணம் இந்த நாட்டு கரன்சியை யாரும் சீண்டுவதே கிடையாது. இந்த நாட்டின் கரன்சி நோட்டுக்கள் கோடிக் கணக்கில் அச்சடிக்கப் பட்டுள்ளன. அதற்கு மதிப்பே கிடையாது. "டாய்லெட் பேப் பராக கூட அதை பயன்படுத்த முடியாது...' என்கின்றனர் இந்த நாட்டு மக்கள். எல்லா கடை வாசல்களிலும் பெரிய போர்டில், "அமெரிக்க டாலர் மட்டும் வாங்கப்படும்...' என எழுதி வைக்கப்பட்டுள்ளது. எந்த பொருளை வாங்க வேண்டும் என்றாலும், அமெரிக்க கரன்சியான டாலரைத்தான் வழங்க வேண்டும். -  ஜோல்னா பையன்.    



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us