தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்

அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்

அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
அ நிறம் | அளவு

மதிப்பிற்குரிய அக்காவுக்கு

எனக்கு வயது 42. என் தோழி, எதிர் வீட்டில் குடியிருப்பவள். அவளும், அவள் கணவரும், நல்ல நிறுவனத்தில், நல்ல உத்தியோகத்தில் இருக் கின்றனர். ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள் வெளியூரில் படிக்கின்றனர். அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருத்தியுடன், அவள் கணவருக்கு சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு விட்டது.

அவர் மனைவி, சந்தேகப்பட்டு, வேலைக்காரியை வேலையிலிருந்து நிறுத்தியும், தொடர்பை புதுப்பித்துக் கொண்டுள்ளார். யாரும் இல்லாத நேரத்தில், மதியம் வீட்டு வேலைக்கு வருவது போல் வந்துவிட்டுப் போகிறாள். மதியப் பொழுது என்பதால், வீடுகளில் எல் லாரும் தூங்குவர்; யார் பார்க்கப் போகின்றனர் என்ற எண்ணம் அவர்களுக்கு. தெரு விஷமிகள் ஏதாவது செய்து, அவர்களைக் கேவலப்படுத்தும் முன், என் தோழியிடம் இதை நானே பக்குவமாய் எடுத்துச் சொல்லலாமா... வேண் டாமா? இந்தத் துரோகத்தை அவள் தாங்குவாளா? வாரத்தில் இரண்டு நாள் வேலைக்காரியை வீட்டுக்கு வரவழைக்கும் கணவன் செயல், மனைவிக்குச் செய்யும் பச்சை துரோக மில்லையா? இதற்கு தாங்கள் உடனே தீர்வு சொன்னால் நல்லது. நான் நேரடியாய் சொல்லப் போய், எனக்கு ஏதாவது பிரச்னை வருமா? என்னால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் குடும்பம் அசிங்கப்படக் கூடாதில்லையா?

ஒரு மனைவிக்கு, இயல்பான இந்தக் கேள்வி கூடவா மனதில் தொக்கி நிற்காது அல்லது அவன் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டாளா? சஞ்சலத்தோடு உலா வரும் அவளைப் பார்ப்பதற்கும் வேதனையாக இருக்கிறது. தங்கள் தீர்வு, எனக்கு மட்டுமல்லாது, தினமலர் நாளிதழ் படிக்கும் அவளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாய் அமையும். தயவு செய்து விரைவில் தீர்வு சொல் வீர்களா? — எதிர்பார்ப்புடன், உங்கள் தங்கை.



அன்புள்ள தங்கைக்கு—

உன் கடிதம் கிடைத்தது. உன்னுடைய கடிதத்தில், உன் கணவன் பற்றியோ, உன் குழந்தைகள் பற்றியோ தகவல் இல்லை. நீ பணிக்கு செல்லாத இல்லத்தரசி என நினைக்கிறேன். உன் கடிதத்தை மேம்போக் காக படித்தால், நீ பிறரின் குற்றம், குறைகளை தோண்டித் துருவி ஆராயும் மாரல் போலீசோ என தோன்றும் அல்லது எதிர்வீட்டு ஆண் தன்னை பார்க்கவில்லை என்ற ஆதங்கம் உனக்குள் ஒளிந்திருக்கிறது என்ற முட்டாள் தனமான சந்தேகமே தோன்றும். ஆனால், ஊன்றி கவனித்து வாசித்தால், தோழியின் குடும்பம் வீணாகிவிடக் கூடாதே என்ற பதைபதைப்பு தெரிகிறது உன் கடிதத்தில்.

உன் கடித நடையும், அடித்தல், திருத்தல் இல்லாத எழுத்தும், கண்ணியமான வார்த்தைகளும், உன் மேன்மையை வெளிப் படுத்துகின்றன.

தோழியின் கணவன், வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்துள்ளான், அதை எப்படி கத்தரித்து, தோழி யின் குடும்பத்தை காப்பாற்று வது... இதுதானே உன் தலையாயக் கேள்வி! உன் தோழி சந்தேகப் பட்டு தான் பணிப் பெண்ணை வேலையிலிருந்து நிறுத்தியிருக்கிறார். கணவனுக் கும், வேலைக்காரிக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு, உன் தோழிக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக் கிறது. தவறான உறவு வைத்திருப் பவர்கள், மனைவியை நெருங்க மாட்டார்கள். உடன் சேர்ந்து தூங்குவதில் கூட, சிறுசிறு அசவுகரியம் காட்டுவர்.

பணிக்கு செல்லும் கணவன் - மனைவி, வெளியூரில் தங்கி படிக்கும் பிள்ளைகள், தவறான உறவுகளை தொடர, தோழியின் கணவனுக்கு தக்க சந்தர்ப்பம். வாரம் இரண்டு நாள், வேலைக்காரியுடன்  சல்லாபம். புத்திசாலி மனைவி என்றால், இந்த விஷயங்களை எளிதில் மோப்பம் பிடித்து விடுவாள். உன் கணவன் உனக்கு துரோகம் செய்கிறான் என, தோழியிடம் சொல்லலாமா, வேண்டாமா என பரிதவிக்கிறாய் இல்லையா?

முதலில், உன் தோழியின் குணநலம் என்ன என்பதை யோசி. சிலர், தங்களின் குடும்ப அங்கத்தினர் தவறுகளை பிறர் சுட்டிக்காட்ட விரும்ப மாட்டார்கள். "என் புருஷன் எப்படி யிருந்தா உனக்கென்ன... உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போடி...' என, உங்கள் தோழி கூறலாம். இன்னொரு முக்கியமான விஷயத்தை நீ கவனத்தில் கொள்ள வேண்டும். உன் குடும்ப நலனுக்கு பிறகு தான், பிறரின் குடும்ப நலன். ஆகவே, இந்த விஷயத்தை, உன் கணவரிடம் முதலில் தெரியப்படுத்து. உன் கணவருக்கு, எதிர்வீட்டு ஆணின் திருவிளையாடல் தெரிந் திருக்க வாய்ப்பிருக்கிறது. இரு ஆண்கள் கூடிப் பேசும் போது, கள்ள உறவை சாதனைகளாக தம்பட்டம் அடித்துக் கொள்வர். கணவரின் சம்மதத்துடன், விஷயத்தை தோழிக்கு தெரியப் படுத்து.  தோழியிடமோ, உன் கணவனிடமோ இது பற்றி விவாதிக்க விருப்பமில்லாவிட்டால் விடு; வேறொரு வழி இருக்கிறது. தோழி அறிந்து கொள்ளாத விஷயங்களை கைபேசி மூலம், அவளது கணவனின் துர்நடத்தை பற்றிய எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்., அனுப்பிவிட்டு, அமைதி பெறு. உன் தோழி புத்திசாலி என்றால், எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்.,சில் உஷாராகி, கணவனின் கள்ள உறவை கத்தரித்து, அவனை தகுந்த முறையில் தண்டிப்பாள்! எஸ்.எம்.எஸ்.,ஐ அவள் கண்டுகொள்ளாமல் இருந்தால், தவறுக்கு அவளும் உடந்தை என்பதை புரிந்து, மதியநேர எதிர்வீட்டு ஆராய்ச்சியை தலை முழுகிட்டு, வேறு உபயோகமான வேலையைப் பார்.

— என்றென்றும் அன்புடன், சகுந்தலா கோபிநாத்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us