தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மூச்சு விடும் நரசிம்மர்!

மூச்சு விடும் நரசிம்மர்!

மூச்சு விடும் நரசிம்மர்!


PUBLISHED ON : ஜூன் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருவறையில் உள்ள சிலையின் மூக்கில் இருந்து வரும் காற்றால், தீபம் அசைகிறது. இந்த அதிசயம், தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், வாடபல்லி நரசிம்மர் கோவிலில் நடக்கிறது.

சிவனின் உத்தரவுபடி அகத்தியர், இமயத்தில் இருந்து தெற்கே வந்த போது, கிருஷ்ணா மற்றும் மூசி நதிகள் இணையும் இடத்தில் தங்கினார். அப்போது, வானில் அசரீரி ஒலித்தது. 'அகத்தியரே... நதிகள் சங்கமிக்கும் இடத்தில், நரசிம்மரின் விக்ரகம் உள்ளது. அதைப் பிரதிஷ்டை செய்த பின், உங்களின் யாத்திரையைத் தொடருங்கள்...' என்றது.

அகத்தியரும், அதை பிரதிஷ்டை செய்தார்.

நாளடைவில், சிலை புதைந்து விட்டது. ரெட்டி ராசுலு என்பவர், இங்கு, ஒரு நகரத்தை உருவாக்க முயன்ற போது, நரசிம்மரின் சிலை வெளிப்பட்டது. கி.பி., 1377ல், கோவில் கட்டப்பட்டு, வழிபாடு துவங்கியது.

இங்கு, பூஜை செய்த அர்ச்சகர் ஒருவர், கருவறையிலிருந்த நரசிம்மரிடம் இருந்து, மூச்சு வெளிப்படுவதை உணர்ந்தார். அதை சோதிக்க, சிலை மூக்கின் அருகில் ஒரு விளக்கை ஏற்றிப் பிடிக்க, அதன் சுடர் காற்றில் அசைந்தது. அதே நேரத்தில், சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம், அசையாமல் எரிந்தது. இப்போதும், இந்த விளக்குகள், அசைந்தும், அசையாமலும் எரியும் அதிசயத்தைக் கான முடிகிறது.

இந்த சிறிய கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர், சுண்ணாம்பு சிற்பங்களாக உள்ளன. லட்சுமி தாயாரும் அருள்பாலிக்கிறாள். கருடன், அனுமன் வாகனங்கள், பார்க்க வித்தியாசமாக உள்ளன.

ஆன்மிக உபன்யாசகர், முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார், 1992ல், இக்கோவிலில் யாகம் நடத்தினார். அதன் பின், கோவில் வளர்ச்சி அடைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலுள்ள பஞ்ச நரசிம்ம தலங்களில், இதுவே முதல் கோவில்.

சென்னையில் இருந்து நல்கொண்டாவுக்கு, ஐதராபாத் எக்ஸ்பிரசில் செல்லலாம். இங்கிருந்து, 73 கி.மீ., துாரத்தில், மிரியாலக்குடா என்னும் ஊர் வரும். அங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., துாரத்தில், வாடபல்லி நரசிம்மர் கோவில் உள்ளது.

காலை, 7:00 - 11:00 மணி வரையும், மாலை, 6:00 - 7:30 மணி வரையும், கோவில் திறந்திருக்கும்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us