PUBLISHED ON : ஏப் 08, 2012

பிரிட்டனைச் சேர்ந்த ஜெம்மா தெவன்ட்லே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் எடை என்ன தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள், 5.45 கிலோ. பிரிட்டனில், இதுவரை பிறந்த குழந்தைகளிலேயே, பிறக்கும்போது அதிக எடையுடன் பிறந்த, 'குண்டு' குழந்தை என்ற பெயர், இந்த குழந்தைக்கு கிடைத்துள்ளது. பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது, சராசரியாக மூன்று கிலோவில் இருந்து, அதிகபட்சமாக, நான்கு கிலோ வரை எடை இருக்கும். ஆனால், இந்த குழந்தையின் எடை, 5.45 கிலோவாக இருப்பது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், மற்றுமொரு ஆச்சரியமும் உள்ளது. பொதுவாக, சராசரிக்கும் அதிகமான எடையுள்ள குழந்தையாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலமே, பிரசவம் நடக்கும். இந்த குழந்தையோ, இயற்கையான முறையிலேயே பிறந்துள்ளது. 'ஆறு மாத குழந்தைகளுக்கு அணிவிக்க கூடிய உடைகளை, என் குழந்தைக்கு இப்போதே அணிவிக்கிறோம்...' என, பெருமையுடன் கூறுகிறார், குழந்தையின் தாயார்.
— ஜோல்னா பையன்.
