/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பிரிட்டன் இளவரசிக்கு, 4 பாப்பா வேண்டுமாம்!
/
பிரிட்டன் இளவரசிக்கு, 4 பாப்பா வேண்டுமாம்!
PUBLISHED ON : அக் 18, 2015

பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு, ஜார்ஜ் என்ற, 2 வயது ஆண் குழந்தையும், சார்லெட் என்ற ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இளவரசி கேட் மிடில்டன், மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக, பிரிட்டனில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கேத் மிடில்டனுக்கு, தற்போது, 33 வயதாகிறது. 40 வயதாவதற்குள், நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக ஆசைப்படுகிறாராம். அதனால் தான், சார்லெட் பிறந்த, ஒரு சில மாதங்களிலேயே, மீண்டும், அவர் கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அரண்மனை வட்டாரங்களோ, 'தலைவலி காரணமாக, சமீபத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்வதை, இளவரசி தவிர்த்து விட்டார். இதையே காரணமாக வைத்து, கர்ப்பமாக இருப்பதால் தான், இளவரசி அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என, ஒரு சிலர் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர்...' என்கின்றன.
— ஜோல்னாபையன்