
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர், மினி; வங்கி அதிகாரியாக பணியாற்றும் இவரின் வயது, 51; இந்த வயதிலும் மிகவும் இளமையாக இருப்பதுடன், புல்லட்டில் இமயமலையின் கடுமையான பாதைகளில் பயணித்துள்ளார்.
சுங்க இலாகாவில் பணிபுரியும் இவரது கணவர், பிஜு பால், இவருக்கு பக்க பலமாக இருப்பதால் தான் இது சாத்தியமாவதாக கூறுகிறார்.
கோவையில் வசிக்கும் பெற்றோரை காண, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து, தன்னந்தனியாக தன் புல்லட் பைக்கில் வந்து செல்கிறார், இந்தப் புதுமைப் பெண்.
— ஜோல்னாபையன்.

