PUBLISHED ON : நவ 19, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிகவும், எளிமையானவர், கேரள முதல்வர், பிணராயி விஜயன். சமீபத்தில், அவரை பேட்டி கண்ட நடிகரும், எம்.பி.,யுமான, இன்னசென்ட், 'சார்... 'தண்ணீ' போட்டதுண்டா?' என்று கேட்க, 'இல்ல...' என்று கூறியுள்ளார். 'ஒரு முறை கூட மது அருந்தியது இல்லயா...' என்று அவர் ஆச்சரியமாக கேட்க, சிரித்தபடி, 'சத்தியமா இதுவரை மது அருந்தியதே இல்ல...' என்று கூறியுள்ளார்.
அடுத்து, 'பீடி பிடித்ததுண்டா?' என்று கேட்ட போது,'இளமையில், நான், 'செயின் ஸ்மோக்கராக' இருந்தேன்; ஒரு சமயம், காய்ச்சல் வந்து படுக்கையில் கிடந்த போது, பல நாட்கள் வெளியே போகவோ, சிகரெட் புகைக்கவோ முடியவில்லை. அப்போது தான், இத்தனை நாட்கள் சிகரெட் இல்லாமல் இருக்க முடிகிறதே பின், எதற்கு அதை மீண்டும் புகைக்க வேண்டும் என நினைத்து, விட்டு விட்டேன்...' என்று கூறியுள்ளார்.
— ஜோல்னாபையன்.

