PUBLISHED ON : மே 30, 2021

புதுடில்லியில், காவல் துறையில் பணியாற்றிய, ஷைனிக்கு, சிறு வயதிலிருந்தே, புல்லட் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது.
காவல்துறை பணி மீது ஏற்பட்ட அதிருப்தியால், வேலையை ராஜினாமா செய்து, தன் சொந்த ஊரான, திருவனந்தபுரம் வந்தார். புல்லட் ஒன்றை வாங்கி, ஆசை தீர ஓட்டியவர், இந்தியா முழுவதும் சுற்றி வந்தார்.
இந்தியாவில், இரு சக்கர ஓட்டிகளுக்கான, 'அயன்பட்' என்று, ஒரு போட்டி இருக்கிறது.
பெங்களூரிலிருந்து புனே சென்று, 24 மணி நேரத்துக்குள் பெங்களூர் திரும்ப வேண்டும். 1,680 கி.மீ., பயணத்தின்போது, துாங்கவோ, ஓய்வு எடுக்கவோ கூடாது. சிறுநீர் கழிக்க மட்டும், ஐந்து நிமிட அனுமதி உண்டு.
இந்த போட்டியில் பங்கேற்று வென்ற, ஷைனியிடம், ஆறு புல்லட் பைக்குகள் உள்ளன. அதில், 'இமாலயா' என்ற பைக்கை விரும்பும் இவர், பெண்களுக்கு புல்லட் ஓட்ட பயிற்சியும் அளித்து வருகிறார்.
— ஜோல்னாபையன்
