தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகின் அதிக வயதான போலீஸ்!

உலகின் அதிக வயதான போலீஸ்!

உலகின் அதிக வயதான போலீஸ்!


PUBLISHED ON : மே 30, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் அர்கான்சா மாகாணத்தைச் சேர்ந்தவர், பக்சார்ட் ஸ்மித். இவருக்கு வயது, 91. இந்த வயதிலும், போலீஸ் துறையில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார் என்றால், நம்ப முடிகிறதா...

இவர், 65 வயதிலேயே பணி ஓய்வு பெற்றாலும், போலீஸ் துறைக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், உயர் அதிகாரிகளை அணுகி, கோரிக்கை வைத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்று, தொடர்ந்து பணியாற்ற, நகர நிர்வாகம், அவருக்கு அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வது என, இந்த வயதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவரது வயதை கருத்தில் வைத்து, வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டும் பணியாற்ற, அதிகாரிகள், இவருக்கு சிறப்பு அனுமதி அளித்துள்ளனர். உலகின் மிக வயதான போலீஸ் அதிகாரி என்ற பெருமையும், இவருக்கு கிடைத்துள்ளது.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us