தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/துணுக்கு மூட்டை - சினி செய்திகள்

துணுக்கு மூட்டை - சினி செய்திகள்

துணுக்கு மூட்டை - சினி செய்திகள்


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கன்னடத்துக்கே சென்றார் ஷிகா!

மதுமிதாவின், "கொல கொலயா முந்திரிக்கா' படத்தில் தமிழுக்கு அறிமுகமான ஷிகாவுக்கு, அடுத்தபடியாக தமிழில் படங்கள் கமிட்டாகவில்லை. அதனால், தன் தாய்மொழியான கன்னடத்திற்கு சென்று, "வாரே வா' என்ற படத்தில் நடித்து வரும் ஷிகா, இதற்கு முன், "காலிபட்டா' என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும்!   - எலீசா.



* அடம்பிடித்த  தமன்னா!

நடிப்பை விட, நடன காட்சிகளில் கூடுதல் ஈடுபாடு கொண்டவர் தமன்னா. குறிப்பாக, ஜெயம் ரவியுடன் நடித்து வரும், "தில்லாலங்கடி' படத்தில், பல தமன்னாக்கள் ஆடுவது போன்று இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில், முழுப்பாடலும் படமாக்கிய பிறகு, சில நடன அசைவுகள் தனக்கு திருப்தி இல்லையென்று, அவற்றை ரீ-ஷூட் பண்ணும்படி டைரக்டர் ராஜாவிடம் அடம் பிடித்தார். "இப்படியொரு தொழில் பக்தி மிகுந்த நடிகையை இதுவரை நான் கண்டதில்லை...' என்று சொல்லி, புல்லரிக்கிறார் டைரக்டர். புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய் கட்டி வீசுகிறான்!



* மீண்டும், "கோகுலம்!'

அர்ஜுன் - பானுப்ரியா நடிப்பில், 1993ல் விக்ரமன் இயக்கிய படம், "கோகுலம்!' 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே, "கோகுலம்' டைட்டிலில் இப்போது ஒரு படம் தயாராகிறது. ஷ்ரவானந்த் - பத்மப்ரியா ஜோடி சேரும் இப்படத்தை, சந்திர சித்தார்த் என்பவர் இயக்குகிறார். இதுவும் முந்தைய படத்தைப் போன்று காதல் கதை தான். - சினிமா பொன்னையா.



* மகளின் அந்தஸ்தை உயர்த்தும் தாய்குலம்!

பல படங்களில் நடித்த நடிகைகளுக்கே கேரவன் வசதி கிடைக்காதபோது, "கோ!' படத்தில் நடித்து வரும் மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு, கேரவன் உட்பட அனைத்து உபசரிப்புகளும் தடபுடலாக நடக்கிறது. ஆனால், இதை மேற்படி படக் கம்பெனி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை; மகளின் அந்தஸ்தை உயர்த்திக்காட்ட, ராதாவே, தன் சொந்த செலவில் இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். பெருமை பீதக்கலம்; இருக்கிறது ஓட்டைக்கலம்!   — எலீசா.



* சுஜா எதிர்பார்க்கும் கனவு ரோல்!

"மிளகா' படத்தில் நட்ராஜுக்கு ஜோடியாக  குத்தாட்டம் ஆடிய போது, நடிப்பு என்றாலே என்னவென்று தெரியாமல் இருந்த நான், இப்போதுதான் ஓரளவு நடிக்கத் துவங்கியுள்ளேன் என்று கூறும் சுஜாவுக்கு, சவாலான குடும்பப் பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாக உள்ளதாம். சொன்னால் குற்றம்; சொறிந்தால் அரிப்பு!   - எலீசா.



*  படம் இயக்கும் ராஜு சுந்தரம்!

தம்பி பிரபுதேவா தமிழ், இந்தி என படங்கள்  இயக்குவதில் பிசியாகி விட்ட நிலையில், அவரது அண்ணனான ராஜு சுந்தரமும் ஒரு படம் இயக்க களமிறங்கியுள்ளார்; ஆனால், தமிழில் அல்ல. "பாய்ஸ்' சித்தார்த்தை வைத்து, ஒரு தெலுங்கு படத்தை இயக்குகிறார். "தமிழில் இப்போதைக்கு படம் இயக்க மாட்டேன்; நடன மாஸ்டராக மட்டுமே பணிபுரிவேன்!' என்கிறார். — சி.பொ.,



* விருதை குறிவைக்கும் நயன்தாரா!

இதுவரை தான் நடித்த எந்தப் படத்திலும் டப்பிங் பேசாத நயன்தாரா, முதன்முறையாக தன் தாய்மொழியான மலையாளத்தில் உருவாகியுள்ள, "எலக்ட்ரா' என்ற படத்தில் தனக்குத்தானே டப்பிங் பேசுகிறார். விருதை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், நயன்தாராவுக்கு உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. அதனால், ஒருவேளை தனக்கு விருது கிடைக்கலாம் என்ற நப்பாசையில்தான், ரிஸ்க் எடுத்து டப்பிங் பேசுகிறார். - எலீசா.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us