தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இயற்கை குணத்தை மாற்ற முடியுமா?

இயற்கை குணத்தை மாற்ற முடியுமா?

இயற்கை குணத்தை மாற்ற முடியுமா?


PUBLISHED ON : ஜூன் 10, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதனுக்கு சில சமயம் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒரு பாம்பு, தவளையை விழுங்குவதை பார்க்கிறான். பாம்பின் வாயில்இருந்து தவளையைக் காப்பாற்றினால், பாம்பின் ஆகாரத்தைப் பறித்த பாவம் வந்து சேரும்; தவளையை காப்பாற்றா விட்டால், தவளையை காப்பாற்றாத பாவம் வந்து சேரும். இதற்கு என்ன செய்யலாம் என்று ஒரு முனிவரிடம் கேட்டான்., 'நீ இரண்டையும் செய்யாதே... கண்ணை மூடிக்கொண்டு போய் விடு...' என்றார் முனிவர்.

கசாப்பு கடையில் ஆடு, மாடுகளை வெட்டுகின்றனர். அதை நாம் தடுக்க முடியுமா? அது, அவர்களது தொழில். பணம் சம்பாதிக்கவே அவர்கள் அதைச் செய்கின்றனர். அதை நாம் எப்படி தடுக்க முடியும். இங்கேயும் நாம் கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டியதுதான். ஆக, பாவக் காரியங்கள் செய்வதை தடுக்க முடியாது; கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டியது தான்.

ஒருவன், பசு மாட்டை அடிக்கிறான். 'அடிக்காதே...' என்று சொல்ல வேண்டும். நமக்கென்ன என்று போய் விடக் கூடாது. அடிக்காதே, என்று சொன்னால் மட்டும், அவன் அடிக்காமல் போய் விடுவானா? 'சொல்ல வேண்டியது நம் தர்மம்; அதைச் செய்...' என்கிறது தர்ம சாஸ்திரம்.

ஆட்டையும், மாட்டையும் அடித்துக் கொல்கிறது புலி. இதை நாம் தடுத்து விட முடியுமா? அது புலியின் இயற்கை குணம். அதை நாம் தடுத்து விட முடியாது. வியாபாரிகளில் சிலர் மோசடி செய்வதுண்டு. எடையை குறைத்துப் போடுவது, கலப்படம் செய்வது என்றெல்லாம் உண்டு. இதை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா? வியாபாரிகளுக்கு அது வியாபார தந்திரம். நம் வரையில் கவனமாக இருந்து விடலாம். ஆனால், அவர்கள் தங்கள் தொழிலுக்கு தகுந்தபடி தான் நடந்து கொள்வர்.

பாம்புக்கு அதன் குணம்; புலிக்கு அதன் குணம். இதையெல்லாம் மாற்ற முடியாது. நாம் அனுதாபப்படலாம் அல்லது அவைகளைக் கண்டும் காணாததுபோல் போய் விடலாம். இவைகளைத் தடுக்க முயன்றால் நமக்குதான் தீங்கு. ஆக, இயற் கையை அதன்வழி விட்டு விடுவது நல்லது.

பகவான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஏற்பாடு செய்திருக்கிறான். அதில், நாம் தலையிட முடியாது.

***

ஆன்மிக வினா-விடை!

கற்பூரம் ஏற்றும் போது, கண்களை மூடி வணங்குவது சரியா?

சரியில்லை. கற்பூர வெளிச்சத்தில் கடவுளை தரிசிக்கலாம். இறைவன் ஜோதிமயமானவன். எனவே, கற்பூர ஆரத்தியின் போது, அந்த ஜோதியில் இறைவன் இருப்பதாக கருதி, இரு கைகள் தொட்டு, கண்களில் ஒற்றி கொள்ள வேண்டும்.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us