PUBLISHED ON : செப் 15, 2019

அ நிறம் | அளவு
அழகிய சித்திரம் போல் காட்சியளிக்கும் இது, ஓவியம் அல்ல. ஒரு அழகிய பறவை. வாத்து இனத்தை சேர்ந்த இதன் பெயர், மர வாத்து. உடல் முழுவதும் அழகிய வண்ணங்களால் காட்சி அளிக்கும், இந்த வாத்து, அமெரிக்காவில் உள்ள, டெக்சாஸ் ஏரிகளில் மட்டுமே காணப்படும். இந்த வாத்து போடும் முட்டைகளிலிருந்து வெளியாகும் குஞ்சுகள், உடனடியாக, தண்ணீரில் நீந்தும்.
- ஜோல்னாபையன்.
