
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுமார், 8,000 ஆண்டுகளுக்கு முன், தென் பசிபிக் தீவுகளில் தான் கரும்பு முதன் முதலில் பயிரிடப்பட்டது. மன்னர் அதியமானின் முன்னோர்களால் இந்தியாவிற்குள் கரும்பு கொண்டு வரப்பட்டதாக, அவ்வையார் தன் பாடல் ஒன்றில் கூறுகிறார்.
உடலுக்கு பருமனையும், சக்தியையும் கொடுக்கிறது, கரும்பு. சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது. வயிற்றில் உள்ள அசுத்தத்தை வெளியேற்றுகிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. வாந்தி, பித்தத்தை போக்குகிறது.

