PUBLISHED ON : ஜன 10, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்வி கற்பது என்பது, இரு கண்களைப் போன்றது எனச் சொல்வர். அதையே, எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது, மூத்தோர் வாக்கு.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றார், வள்ளுவர்.
இந்த குறளின் சிறப்பு, எந்த இடத்திலும் துணைக்கால் (ா) இல்லாமல் அமைந்துள்ளது. காரணம், ஒருவன் கற்ற கல்வியானது அவனுக்கு வாழ்நாள் முழுவதும், அவனது கால் போல் துணை வரும் என்பதை குறிக்கிறதாம்.

