
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வேத புராண காலங்களில், 27 நாட்கள், இந்திர விழா கொண்டாடப்பட்டது. இன்று, அதுவே போகி பண்டிகையாக ஒருநாள் விழாவாக கொண்டாடப் படுகிறது
* பொங்கல், சூரியனுக்கான திருநாள் எனப்பட்டாலும், சூரியனாக மகாவிஷ்ணு வடிவெடுத்துள்ளார் என்பதால், பொங்கலன்று, சூரியனோடு நாராயணரையும் வழிபடுவது வழக்கத்தில் உள்ளது
* சூரியன், மகர ராசிக்கு செல்லும் தினம் என்பதால், 'மகர சங்கராந்தி' என்ற பெயர் வந்தது
* சூரியனை வணங்கும் தினமான பொங்கல் திருநாளில் தான், காயத்ரி மந்திரம், விஸ்வாமித்திரரால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது
* யோக நித்திரையில் ஆழ்ந்த தேவர்கள், விழித்தெழும் நாள் என்பதாலும், இனி, அவர்களின் அருள் விரைவில் கிடைத்து பிரச்னைகள் தீரும் என்பதாலும், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழி ஏற்பட்டது.

