sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கார்த்திகை ஸ்பெஷல்!

கார்த்திகை ஸ்பெஷல்!

கார்த்திகை ஸ்பெஷல்!


PUBLISHED ON : டிச 04, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 04, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்த்திகை தீபத்தன்று, அவல் பொரி உருண்டை, பொரி மாவு உருண்டை மற்றும் அப்பம் செய்து, வழிபடுவது வழக்கம்.

அவல் பொரி உருண்டை!



தேவையான பொருட்கள்: பாகு வெல்லத்துாள் - முக்கால் கப், அவல் பொரி - ஐந்து கப். தேங்காய் பல் பல்லாக நறுக்கியது - ஒரு கப், ஏலக்காய் துாள், உடைத்த வறுத்த வேர்க்கடலை - கால் கப். வறுத்த பொட்டுக்கடலை - கால் கப். உடைத்து வறுத்த முந்திரி - கால் கப்.

செய்முறை: அவல் பொரியை, அரிசி ஜல்லடையில் போட்டு மண் போக சலித்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். வெல்லத்தை கால் டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, மண்ணை நீக்கி வடி கட்டவும்.

வெல்லப்பாகு எடுத்து, அதில் தேங்காய் பல், ஏலக்காய் துாள், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு போட்டு இறக்கவும். அவல் பொரியை கொட்டி எல்லாவற்றையும் கரண்டி காம்பால் நன்றாக கலந்து, சூடு பொறுக்கும் பதத்தில் கைகளால் அவல் பொரியை அழுத்திப் பிடித்து உருண்டைகளாக்கவும்.

பொரி மாவு உருண்டை!



தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - ஒரு கப், வெல்லம் - 2 கப், தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி.

செய்முறை: புழுங்கல் அரிசியை வாணலியில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து, மிக்சியில் அரைக்கவும். வெல்லத்தை துாளாக்கி, அரிசி மாவுடன் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். இத்துடன், தேங்காய் துருவல் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி உடனே உருண்டை பிடிக்கவும்.

சத்தான, சுவையான உருண்டை இது.

நெய் அப்பம்!



தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு, வெல்லம் - தலா ஒரு கப், துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய் - கால் கப், நெய் -ஒரு தேக்கரண்டி, எண்ணெய் - 200 கிராம், ஏலக்காய் துாள் சிறிதளவு.

செய்முறை: வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு லேசாக கொதிக்க வைத்து, வடி கட்டவும். அரிசி மாவில் வெல்லக் கரைசல், பல்லாக நறுக்கிய தேங்காய், ஏலக்காய் துாள் கலந்து நெய் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பணியாரச் சட்டியில் மாவை ஊற்றி வேக விட்டு எடுக்கவும். அப்பம் ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us