sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/டிராபிக் பிரச்னை இல்லாத கார்!

டிராபிக் பிரச்னை இல்லாத கார்!

டிராபிக் பிரச்னை இல்லாத கார்!


PUBLISHED ON : ஏப் 10, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2011


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டிராபிக் ஜாம்' மற்றும் 'பார்க்கிங்' பிரச்னைகளால், கார் ஓட்ட தயங்குகிறீர்களா? இனி, அந்த தயக்கம் வேண்டாம் என்கின்றனர் அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தினர்.

டிராபிக் மற்றும் பார்க்கிங் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, இடமாற்றம் செய்யும் வகையில், 360 டிகிரியில், எல்லா திசையிலும் சுழலும் வகையில் உள்ள, 'இ.என்., - வி' எனும் மின்சார காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இரண்டு பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் நெட் ஒர்க்கில் இயங்கும் இந்த கார், பேட்டரியால் இயங்குகிறது; மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த காரை, ஒரு மணி நேர பேட்டரி சார்ஜ் மூலம், 40 கி.மீ., தூரம் செல்ல வைக்கலாம்.

எந்த திசையிலும் சுழலும் இந்த காரை, டிரைவர் இருந்தால்தான் ஓட்ட முடியும் என்பது இல்லை. அருகில் அமர்ந்து பயணம் செய்பவர் கூட எலக்ட்ரிக் சமிஞ்சைகள் மூலம் இயக்க முடியும்.

சீனாவில், 2010ல் நடந்த உலக வர்த்தக பொருட்காட்சியில், இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில், தற்போது அறிமுகமாகி உள்ள இந்த காரை, ஒரு மோட்டார் சைக்கிளை போல எளிதாக கையாளலாம்; பராமரிப்பும், செலவும் குறைவு என்கின்றனர், இதை தயாரித்த, ஜெனரல் மோட்டார்ஸ் அட்வான்ஸ்டு கார் பிரிவினர்.

'குறைந்த அளவு தூர பயணத்திற்கும், டிராபிக் ஜாம் அதிகம் ஏற்படும் ஏரியாக்களுக்கும் செல்ல இந்த கார் மிகவும் உகந்தது...' என்கிறார் இந்த காரின் உற்பத்தி பிரிவு இயக்குனர் போரினி பெர்ட். இந்த கார், மற்ற நாடுகளுக்கு விரைவில் அறிமுகமாகும் என்கிறார் இவர்.

— ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us