
தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின், சியாங்ராய் மாகாணத்தில் உள்ள குகையை சுற்றிப் பார்க்க, ஜூன் 23ம் தேதி, 12 சிறுவர்கள் அடங்கிய கால்பந்து அணி, பயிற்சியாளருடன் சென்றது.
கனமழை காரணமாக, குகையில் இருந்து வெளிவர முடியாமல், உயிருக்காக போராடிய அவர்களை, மயக்கவியல் வல்லுனரும், குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் நிபுணருமான, டாக்டர், ரிச்சார்டு ஹரிஸ், உயிரை துச்சமாக கருதி காப்பாற்றினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், குகை விபத்து ஏற்படும் இடங்களில் முதல் ஆளாக ஆஜராகி விடுவார்.
கடந்த, 30 ஆண்டுகளாக, 'டைவிங்' செய்து வரும் இவர், எளிதில் குகைக்குள் சென்று விடுவார். 2011ல், இதுபோன்ற குகை விபத்து, ஆஸ்திரேலியா நாட்டில் நடந்தது. குகைக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற, இவருடன், ஆக்னஸ் என்ற பெண்ணும் போனார். குகைக்கு உள்ளே தவித்தவர்கள் காப்பாற்றபட்ட போதும், ஆக்னஸிடம் போதுமான பிராணவாயு இல்லாததால், பரிதாபமாக உயிரிழந்தார்.
— ஜோல்னாபையன்.

