
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்க்கஸில் உலோக உருண்டைக்குள், 'மோட்டார் பைக்' ஓட்டுவதை வியப்புடன் பார்த்திருக்கிறோம். இந்தியாவில் முதன் முதலாக, உலோக உருண்டைக்குள் பைக் ஓட்டி, சாதனை படைத்தவர், பிரேமா. 12 வயதில் சர்க்கஸில் சேர்ந்த இவர், 'சாகர், வீனஸ் மற்றும் ராஜ்கமல்' உட்பட, இந்தியாவில் உள்ள பல சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றி இருக்கிறார்.
தற்போது, கோல்கட்டாவை சேர்ந்த, கோபால் பிஸ்வாசை மணந்து, குடும்பத் தலைவியாக உள்ளார்.
— ஜோல்னாபையன்.

