
சீனாவைச் சேர்ந்த, ஷி யுகாங், 27, என்ற பெண், உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். 'பேஷன் டிசைனர் மற்றும் மேக் - அப்' கலைஞர் என, பல துறைகளில் திறமை பெற்றவர், இவர்.
உலகில் பிரபலமான நடிகர், நடிகையர் போல், 'மேக் - அப்' மூலம், தன் முகத்தை மாற்றி, அதை, 'வீடியோ'வாக, சமூக வலை தளங்களில் வெளியிடுவது தான், இவரது பொழுது போக்கு.
இது, தற்போது இவரை, மிகப்பெரிய செல்வந்தராக்கியுள்ளது. உலகின் மிகவும் பிரபலமான மோனலிசா ஓவியம் போல், 'மேக் - அப்' மூலம், தன் முக தோற்றத்தை மாற்றுவதை, சமூக வலை தளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். இதற்கு, பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, ஹாலிவுட் நடிகர், டோனி பெப் போல், தன் முக தோற்றத்தை மாற்றினார்.
இப்படி, இவர், அடுத்தடுத்து வெளியிடும் வீடியோக்களால், உலகில் உள்ள பிரபலமான, 'மேக் - அப்' கலைஞர்கள் அனைவரும், ஆச்சரியத்தில் வாய் பிளந்துள்ளனர்.
— ஜோல்னாபையன்.