தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சுற்றுலா ஸ்பெஷல்!

சுற்றுலா ஸ்பெஷல்!

சுற்றுலா ஸ்பெஷல்!


PUBLISHED ON : ஏப் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை!

திருநெல்வேலியிலிருந்து, 48 கி.மீ., துாத்துக்குடியிலிருந்து, 25 கி.மீ., தொலைவிலும் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில், வெள்ளையர்களுக்கு எதிராக மீசை முறுக்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டை உள்ளது. சிவாஜி நடித்த, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை, நினைத்துக் கொண்டால், அங்குள்ள நினைவுச் சின்னங்களை வரலாற்று நிகழ்வுகளுடன் சுற்றிப் பார்க்கலாம்.

மேலும், நெல்லை - துாத்துக்குடி மார்க்கத்தில், ஆன்மிக பிரியர்கள் தவற விடக்கூடாதவை, நவ கைலாய திருத்தலங்கள்; அதையும் தரிசித்து வரலாம்.

ஜி.டி.நாயுடு மியூசியம்!

தொழில் நகரமான கோவையில், பார்ப்பதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளன. வித்தியாசமான அனுபவம் தேவைப்படுவோர், கோவை டவுன் பஸ்சில், 'ஜி.டி.நாயுடு மியூசியம்' என, கேட்டு இறங்குங்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு புகழ்பெற்ற, ஜி.டி.நாயுடு உருவாக்கிய தொழில்

நுட்ப கண்காட்சியில், விதவிதமான பழமையான அறிவியல் பொருட்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, 'மெக்கானிகல் கால்குலேட்டர்' போன்றவை விழிகளை விரிய வைக்கும். பார்வை நேரம்: காலை, 8:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை.

கொடுத்து வைத்த பூனை!

ஐரோப்பிய நாடான, ஜெர்மனியை சேர்ந்தவர், கார்ல் லேஜர்பீல்டு. 'பேஷன் டிசைனர்' ஆன இவர், மிகப்பெரிய கோடீஸ்வரர். இவருக்கு, குடும்பமோ, உறவினர்களோ இல்லை. செல்லப் பிராணிகள் வளர்ப்பதில், மிகவும் ஆர்வம் உடையவர்.

சமீபத்தில், இவர் வாங்கிய பூனை மீது, ரொம்பவே பாசம் வைத்திருந்தார். எங்கு சென்றாலும், அதையும் உடன் அழைத்துச் செல்வார். அவரது படுக்கையில் கூட, அந்த பூனைக்கு இடம் உண்டு என்றால், பார்த்துக் கொள்ளுங்களேன்.

அந்த பூனைக்கு, 'சவுபீட்' என, பெயர் வைத்திருந்தார். சமீபத்தில், திடீரென இறந்து விட்டார், கார்ல் லேஜர்பீல்டு. அவரது உயிலை படித்து பார்த்த அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர். அவரது சொத்தில், மூன்று பங்கை, ஆதரவற்ற விடுதிகளுக்கு எழுதி வைத்திருந்தார்.

மீதமுள்ள ஒரு பங்கை, தன் செல்லப் பூனையான, சவுபீட்டுக்கு எழுதி வைத்திருந்தார். இந்த பூனைக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1,400 கோடி ரூபாய்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us