/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
'ஏடி' எனப்படும் உயிர்க்கொல்லி நோய்!
/
'ஏடி' எனப்படும் உயிர்க்கொல்லி நோய்!
PUBLISHED ON : ஆக 23, 2015

அல்சைமேர்ஸ் டிசீஸ் என்ற ஞாபக மறதி நோய் சுருக்கமாக, 'ஏடி' என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது. முதுமையின் ஆரம்பத்தில் உள்ள சிலர், இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் சிறு குழந்தை போல செயல்படுவதுடன், எந்த செயலிலும் ஈடுபட முடியாமல் இருப்பர். உலகின் மிக பிரபலமான பலர், இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
மத்திய முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்க தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்றும் உலகில் என்ன நடக்கிறது என்று அறியாமல் வாழ்கிறார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரீகன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் ஹரால்டு வில்சன், டென் கமான்மெண்ட்ஸ் என்ற ஆங்கில படத்தில் நடித்த சால்ட்டன் ஹெஸ்டன், ஐரீஷ் எழுத்தாளர் முர்டோர் ஐரீஷ் போன்ற பிரபலங்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்நோயை குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகில் பல நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
— ஜோல்னாபையன்.