sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கல்லறையில் வேலை பார்க்கும் சீன பெண்கள்!

/

கல்லறையில் வேலை பார்க்கும் சீன பெண்கள்!

கல்லறையில் வேலை பார்க்கும் சீன பெண்கள்!

கல்லறையில் வேலை பார்க்கும் சீன பெண்கள்!


PUBLISHED ON : ஏப் 22, 2012

Google News

PUBLISHED ON : ஏப் 22, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீனாவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள அளவுக்கு, வேலை வாய்ப்புகள் இல்லை. அங்குள்ள இளைஞர்கள், 'எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை, கை நிறைய காசு கிடைத்தால் சரி...' என்ற மனநிலைக்கு வந்து விட்டனர். சீனாவில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகளுக்கு, பெரும்மரியாதை தரப்படுகிறது. உடல்களை அடக்கம் செய்வதற்காக, கல்லறைக்கு வருவோர், துக்கம் தாளாமல் கதறி அழுவது, அனைத்து நாடுகளிலும் நடப்பது தான். சீனாவிலும் இது நடக்கிறது. இவ்வாறு, துக்கம் தாளாமல் கண்ணீர் வடிப்போரை, ஆறுதல் கூறி தேற்றுவதற்காகவே, ஒவ்வொரு கல்லறையிலும், பெண் ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது, சீன அரசு.

முதல் கட்டமாக, ஐந்து பெண்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேரும், 25 வயதுக்கு உட்பட்டவர்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள். மாண்டரின் மொழியில் சரளமாக பேசத் தெரிந்தவர்கள். இவர்களுக்கு ஆண்டுக்கு, தலா எட்டு லட்சம் ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இது தவிர, வசிப்பதற்கு ஆடம்பரமான ஒரு வீடு உள்ளிட்ட சில வசதிகள் இலவசம்.

கல்லறையில் வேலை செய்வது குறித்து, அந்த பெண்கள் கூறுகையில், 'வேலை ஒன்றும் சிரமமில்லை. இந்த வேலையை மட்டமாக கருதவில்லை. ஆனாலும், இந்த வேலையில் சேருவது தான், பெரும் சிரமமாக இருந்தது. ஐந்து பணியிடங்களுக்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். கல்லறை வேலையாக இருந்தால் என்ன, காசு கிடைக்கிறதே...' என, உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

ஜோல்னா பையன்.






      Dinamalar
      Follow us