PUBLISHED ON : டிச 06, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸ் நகரில், சமீபத்தில் வித்தியாசமான, 'பேஷன் ஷோ' நடந்தது. இப்போட்டியில் பங்கேற்ற அழகிகள், வழக்கமான உடைகளுக்கு பதிலாக, முற்றிலும் சாக்லேட்டால் வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிந்து அசத்தினர்.
விதம் விதமான சுவைகளால் தயாரான சாக்லேட்டுகளை, அழகான உடைகளாக வடிவமைத்திருந்தனர், உடை அலங்கார நிபுணர்கள். போட்டி முடிந்ததும், அழகிகள் அணிந்திருந்த சாக்லேட் உடைகள், பல லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.
— ஜோல்னாபையன்

