/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
ஒரே அலுவலகத்தில், 60 ஆண்டுகள் ஓவியராக!
/
ஒரே அலுவலகத்தில், 60 ஆண்டுகள் ஓவியராக!
PUBLISHED ON : டிச 06, 2015

'அம்புலிமாமா' பத்திரிகையில், 60 ஆண்டுகளாக தலைமை ஓவியராக பணியாற்றியவர் சங்கர்; தற்போது, அவரின் வயது, 92. விக்ரமாதித்தன் மற்றும் வேதாளம் கதைக்கான படத்தை வரைந்தவர் இவர் தான்! இன்றும், கை நடுக்கம் இல்லாமல், 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' பத்திரிகைக்கு ஓவியம் வரைகிறார்.
ஒரு இளம், 'கார்ட்டூனிஸ்ட்' அவரிடம், '60 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் வேலை செய்திருக்கீங்க... இப்பவும் ஓவியம் வரையுறீங்களே உங்களுக்கு போர் அடிக்கலயா...' என கேட்க, 'வேலையில், போர் என்ற வார்த்தையே, என் அகராதியில் இல்ல; முழு ஈடுபாட்டோடு ஒரு வேலையை செய்யும் போது, எப்படி போர் அடிக்கும். கடவுள் அருளால், இப்பவும் ஓவியங்கள் வரையுறேன். அந்த திருப்தியே எனக்கு போதும்...' என்று நெத்தியில் அடித்தார் போல் பதில் அளித்தார்.
— ஜோல்னாபையன்.

