தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

பெண் அதிகாரிக்கு மிரட்டல்!

பெண் அதிகாரிக்கு மிரட்டல்!


PUBLISHED ON : டிச 06, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவனந்தபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை, கமிஷனராக உள்ளார் டி.வி.அனுபமா. இவருக்கு தினமும் ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

சமீபத்தில், கேரளாவிற்கு மற்ற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளில், அளவுக்கு அதிகமாக பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதை, பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர் உணவு பாதுகாப்பு துறையினர். இதனால், காய்கறிகளை கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் அனுபமா.

இது, பூச்சிகொல்லி மருந்து விற்பனையாளர்களை, ஆத்திரப்படுத்தியுள்ளதால், பல்வேறு வழிகளில், அனுபமாவிற்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆனால், 'மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நடவடிக்கை எடுப்பது என் கடமை; எந்த மிரட்டல்களுக்கும் அஞ்ச மாட்டேன்...' என்கிறார், இந்த கடமை உணர்வு உள்ள அதிகாரி!

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us