PUBLISHED ON : டிச 20, 2020

* வடக்கு அட்லாண்டிக் தீவு நாடான, ஐஸ்லாந்தில், கிறிஸ்துமஸ் அன்று புத்தகம் படிப்பது வழக்கம். இதனால், புத்தகம் வெளியிடுவோர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டு, பணம் பார்ப்பர்.
* 'இங்கு, 900 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் அன்று, புத்தகம் படிப்பது தொடருகிறது. அது மட்டுமல்ல, பலர் கிறிஸ்துமஸ் சமயம், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் புத்தகங்களை பரிசாக அளிப்பர். பண கஷ்ட காலத்திலும் இது தொடர்ந்தது...' என்கிறது, வரலாறு
* ஐஸ்லாந்து நபர்களில், 10ல் ஒருவர், தன் வாழ்நாளில் கண்டிப்பாக புத்தகம் எழுதி விடுவார். இங்கு, மர்ம கதைகளுக்கு, 'டிமாண்ட்' அதிகம். இதனால், ஏகப்பட்ட மர்ம கதை எழுத்தாளர்கள் உள்ளனர்
* ஐஸ்லாந்தில் புத்தகம் வெளியிட்டால், அதில், 25 சதவீதத்தை அரசு ஏற்கும்
* பிரிட்டனில், கிறிஸ்துமஸ் சமயத்தில், தனிமையில் வாடுவோர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை மகிழ்விப்பர். சேவை இயக்கங்கள் மூலம், சில நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்கள் மனதை மகிழ வைத்து, தனிமையை விரட்ட உதவுகின்றனர்.