PUBLISHED ON : டிச 22, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரஷ்யாவில், கிறிஸ்துமஸ் விழா, ஜன., 7ல் தான் நடைபெறும். காரணம், அவர்கள் ஜூலியன் காலண்டரை பின்பற்றுகின்றனர். ரஷ்யா போன்றே எத்தியோப்பியாவிலும், ஜன., 7ல் தான் கிறிஸ்துமஸ். ஆனால், எத்தியோப்பியர்கள், நவ.,25லிருந்து, கிறிஸ்துமஸ் வரை, 43 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, சிரத்தையாக கொண்டாடுவர்
* முதல் கிறிஸ்துமஸ் தபால் தலை, 1962ல், அமெரிக்காவில் வெளியிடப்பட்டது
* தென் ஆப்ரிக்காவின் சில பகுதிகளில், கிறிஸ்துமஸ் அன்று, கம்பளி பூச்சியை, 'ரோஸ்ட்' செய்து சாப்பிடுவது ஸ்பெஷல்
* இந்திய பெருங்கடல் பகுதியில், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் ஒரு தீவு உள்ளது.

