/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கிறிஸ்துமஸ், 'கேக்' தயாரிப்பு, இப்படி தான்!
/
கிறிஸ்துமஸ், 'கேக்' தயாரிப்பு, இப்படி தான்!
PUBLISHED ON : டிச 22, 2019

கிறிஸ்துமசுக்காக தயாரிக்கப்படும், 'பிளம் கேக்' தனித்துவம் வாய்ந்தது. 18ம் நுாற்றாண்டுக்கு முன் வரை, 'கேக்' தயாரிப்பை, 'பிளம் போட்டிக்' என்று அழைத்தனர்
* மாட்டிறைச்சி, ரொட்டி துண்டுகள், சில மசாலா பொருட்கள், உலர்ந்த பழ வகைகள், சர்க்கரை மற்றும் ஒயின் இவையெல்லாம் நிறைந்த கலவையே, 'பிளம் போட்டிக்!' இதை, 40 நாட்கள் வரை ஊற வைத்து, கிறிஸ்துமசுக்கு ஓரிரு தினங்களுக்கு முன் வேக வைத்து, 'கேக்' தயாரிப்பர்
* 'பிளம் போட்டிக்' 18ம் நுாற்றாண்டுக்கு பின் முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக, 'கிறிஸ்துமஸ் புட்டிங்' புழக்கத்திற்கு வந்தது. இந்த வகை, 'கேக்'கில் இறைச்சி இல்லை. நிறைய உலர் பழங்கள், பேரீட்சை, தேன், பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி போன்ற பருப்பு வகைகளுடன், ஒயின், பிராந்தி மற்றும் ரம் போன்ற மது வகைகள் கலந்து தயாரிப்பர். இதில், 'பிளம்' சேர்க்கப்படுவதில்லை. இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலத்துக்கு முன் வரை, உலர் பழங்கள் அனைத்துமே, 'பிளம்' என்றே அழைக்கப்பட்டதால், இதற்கு இப்பெயர் வந்தது
* இந்த கலவையை, ஆறு வாரங்களுக்கு இறுக்கமாக மூடி வைத்திருப்பர். வாரத்துக்கு ஒருமுறை கலவை மேல், மது வகைகளை ஊற்றுவது, ஐரோப்பியர்களின் வழக்கம். கிறிஸ்துமசுக்கு முந்தைய இரவில், தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்து, இந்த, 'கேக்'கை சாப்பிட்டு, விருந்தை ஆரம்பிப்பது, ஐரோப்பியர்களின் பாரம்பரிய வழக்கம்.

